கோவில்களுக்கு பூட்டு, சர்ச் ‘தேர் பவனிக்கு’ ரூட்டு

 கோவில்களுக்கு பூட்டு, சர்ச் ‘தேர் பவனிக்கு’ ரூட்டு

கொரோனா பரவி விடும் என்று காரணம் காட்டி ஆடி முதல் புரட்டாசி வரை ஹிந்துக்ளுக்கு ஆன்மீக ரீதியாக முக்கியமான மாதங்களில் கோவில்களைப் பூட்டி வைத்து விட்டது ‘இந்து சமய’ அறநிலையத் துறை. இந்தத் துறை இந்து சமயத்துக்கானது என்று துறை சார்ந்தவர்கள் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு கோவிலில் உண்டியல் வசூல் குறிப்பிடத்தக்க அளவில் வருகிறது என்றாலோ, நிர்வகிப்பவர்களுக்குள் எதாவது பிரச்சினை என்றாலோ, வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடும் அறநிலையத் துறை அதிகாரிகள் பழமையான கைவிடப்பட்ட கோவில்களாக இருந்தால் அது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளக் கூட முற்படுவது இல்லை.

இப்படிப்பட்ட தற்குறி துறைக்கு பொருத்தமாகவே அமைச்சர்களும் அமைகின்றனர். இப்போது பதவி வகிக்கும் அமைச்சர் சேகர் பாபு பெயரில் மட்டும் தான் இந்து போலும். எப்போது கோவில்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, “கடவுள் வழிபாடும் இன்றியமையாத ஒன்றுதான் என்றாலும் பாதுகாப்பு நடைமுறைகள் அதைக்காட்டிலும் முக்கியம். கொரோனா மூன்றாம் அலை அச்சம் இருப்பதால், அந்த அபாயக் கட்டத்தைக் கடந்த பின்னரே கோயில் திறப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும். உடல் நிலை சரியில்லை என்றால் கசப்பு மருந்து எடுத்துக் கொள்வதைப் போலத்தான் கொரானா கட்டுப்பாடுகள்.” என்று கூறினார்.

தற்போது உடல் நிலை சரியில்லாமல் போய் இருப்பது இந்துக்களுக்கு மட்டும் தானா?, கசப்பு மருந்து இந்துக்களின் தொண்டைக்குள் மட்டும் தான் திணிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக ஊடகங்களில் வலம் வரும் “தேர் பவனி” மற்றும் “கொடியேற்றம்” வீடியோக்கள் தான் இதற்கு காரணம்.

தக்கலை புனித மைக்கேல் சர்ச் திருவிழா கொடியேற்றத்தில் கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவர்கள் பங்கேற்றதாக செய்தி வெளியான அதே நாளில், பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் செய்தி வெளியாகிறது. கோவில் தேர்கள் இரண்டு வருடங்களாக தேர்முட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், “ராஜகன்னி”, “மைக்கேல் அதிதூதர்”, “மலை மழை மாதா” அனைவரும் தேர் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.

“வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று பக்தர்கள் வழிபட அனுமதிக்கக் கூடாது” என்ற விதியால் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அதுவுமாக பெருமாளை சேவிக்க முடியவில்லையே என்று பக்தர்கள் வேதனையுறும் அதே சனிக்கிழமை அன்று அச்சிறுப்பாக்கம் மலையை ஆக்கிரமித்து சர்ச் கட்டிய கிறிஸ்தவர்கள் தேரோட்டம் நடத்தினார்கள்.

இதில் இதயத்தைப் பிசையும் விஷயம் என்னவென்றால் கொடியேற்றமும் தேரோட்டமும் சனாதன தர்ம வழக்கங்கள். இதை கூச்சமில்லாமல் காப்பியடித்தது மட்டுமல்லாமல் அரசியல் செல்வாக்கு மூலம் கோவில்களை மூடச் செய்து தங்கள் பலத்தையும் காட்டுவதற்கு இந்துக்களும் ஒரு வகையில் காரணம் தான். குட்டக் குட்டக் குனிந்ததால் தான் குழி தோண்டி புதைத்து விடப் பார்க்கிறார்கள். இனியாவது வெகுண்டெழுமா இந்து சமூகம்? 

Paanchajanya

0 Reviews

Related post